CRIME
“உன் வேலையைக் காலி செய்துவிடுவேன்..” ஹோட்டல் அறையில் 2 இளைஞர்களுடன் சிக்கிய மனைவி விடுத்த மிரட்டல்.. மனமுடைந்த காவலர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த காவலர் ஒருவர், தனது மனைவியின் தகாத உறவைக் கையும் களவுமாகப் பிடித்த நிலையில், மனைவி விடுத்த கொடூர மிரட்டலால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரூக்காபாத் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி வந்த பிரதீப் குமார் என்பவருக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு சுஜாதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தனது மனைவி அடிக்கடி பெற்றோர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வெளியே செல்வதால் சந்தேகமடைந்த பிரதீப், தனது ரகசியத் தகவல் வட்டாரங்கள் மூலம் மனைவியின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அப்போது அரசு குடியிருப்பிலிருந்து பெற்றோர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிப் புறப்பட்ட சுஜாதா, இரண்டு இளைஞர்களுடன் தனியார் ‘ஓயோ’ ஹோட்டலுக்குச் செல்வதைப் பிரதீப் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஹோட்டல் அறைக்குள் நுழைந்த பிரதீப் தனது மனைவியைக் கையும் களவுமாகப் பிடித்தார்; ஆனால், பிரதீப்பைக் காவலர் சீருடையில் கண்ட அந்த இரண்டு இளைஞர்களும் ஹோட்டல் மாடியிலிருந்து குதித்துத் தப்பியோடினர். பின்னர் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்த பிரதீப் இது குறித்துக் கேட்டபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின்போது தவறை உணர்வதற்குப் பதிலாக ஆவேசமடைந்த சுஜாதா, பிரதீப்பைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், “உன் வேலையைக் காலி செய்துவிடுவேன்” எனப் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளான காவலர் பிரதீப் குமார், தனது தந்தையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் வேதனையுடன் கூறிவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகனைக் காப்பாற்றத் தந்தை விரைந்து வருவதற்குள் பிரதீப் உயிரிழந்த நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சுஜாதாவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
