LATEST NEWS
“மரண பயத்தில் நடுங்கிய நாய்”…வேடிக்கை பார்த்த கூட்டம்.. இரவு நேரத்தில் தேவதூதனாக வந்து காப்பாற்றிய இளைஞர்…!!
புதுடெல்லி அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், அடுக்குமாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த வளர்ப்பு நாய் ஒன்று தரையில் விழாமல் அருகிலிருந்த தெருவிளக்கு மின்கம்பத்தின் உச்சியில் சிக்கிக்கொண்டது. பல அடி உயரத்தில் இறங்க முடியாமல் நாய் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்தக் காட்சி அடங்கிய வீடியோ ‘கர் கே கலேஷ்’ என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய பாரம்பரிய இரவு நேர ஊர்வலமான ‘ஜாகோ’ நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த குழுவினர் இதைக் கவனித்துள்ளனர். நாயின் உரிமையாளர் பதற்றத்துடன் நிற்கவும், மற்றவர்கள் வேடிக்கை பார்க்கவும், அந்தக் குழுவைச் சேர்ந்த மோஹித் என்ற இளைஞர் தயங்காமல் மின்கம்பத்தில் ஏறி, பழுப்பு மற்றும் வெள்ளை நிற நாயைப் பத்திரமாகப் பிடித்துக் கீழே கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
தன் உயிரைப் பொருட்படுத்தாமல் வாயில்லா ஜீவனைக் காப்பாற்றிய மோஹித்தின் இந்தத் துணிச்சலான செயலுக்கு இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். மனிதநேயம் இன்னும் வாழ்கிறது என்றும், இது தன்னலமற்ற உயிர்காப்பு உதவி என்றும் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
