“முகநூலில் வந்த ‘வசியம் தந்திரம்’ லிங்க்”…முகநூல் விளம்பரத்தை நம்பி ரூ.2.77 லட்சத்தை இழந்த பரிதாபம்… நெல்லை சைபர் கிரைம் போலீஸ் தீவிர விசாரணை…!! – cinefeeds
Connect with us

CRIME

“முகநூலில் வந்த ‘வசியம் தந்திரம்’ லிங்க்”…முகநூல் விளம்பரத்தை நம்பி ரூ.2.77 லட்சத்தை இழந்த பரிதாபம்… நெல்லை சைபர் கிரைம் போலீஸ் தீவிர விசாரணை…!!

Published

on

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஓட்டுநராகப் பணியாற்றும் இவரது கணவருக்கு மதுப்பழக்கம் இருந்த நிலையில், முகநூலில் ‘பாண்டி அம்மாவின் வசியம் தந்திரம்’ என்ற பக்கத்தின் லிங்க் மூலம் குடிப்பழக்கத்திலிருந்து மீட்கும் விளம்பரத்தைக் கண்டு அதில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த எண்ணில் பேசிய நபர் மற்றொரு எண்ணைத் தர, அதில் பேசிய பெண் குடும்ப விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மதுப்பழக்கத்தை நிறுத்த சக்திவாய்ந்த பொடி, கயிறு, சக்திக்கல், செம்பு பட்டை ஆகியவை தருவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி அப்பெண் பல்வேறு காரணங்களுக்காக ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

Advertisement

ஆனால் கூறியபடி எந்தப் பொருளும் அனுப்பப்படாததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளம்பெண், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in