LATEST NEWS
BREAKING:பிரதமர் இல்லத்தில் குவிந்த பாஜக மூத்த தலைவர்கள்… தமிழக அரசியல் நிலவரம் குறித்து தீவிர ஆலோசனை..!!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சமரசம் செய்யும் நோக்கில் சென்னையில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூடியுள்ள பரபரப்பான அரசியல் சூழலில், டெல்லியில் பாஜக மேலிடம் நடத்தி வரும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த முக்கியக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதின் நபின், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசியல் நிலவரம், தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் இண்டியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கு மத்தியில் பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் வியூகங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
