தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. மு.க. ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி பகிரங்க ஆதரவு… இண்டியா கூட்டணிக்கு அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. மு.க. ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி பகிரங்க ஆதரவு… இண்டியா கூட்டணிக்கு அதிர்ச்சி..!!

Published

on

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடுத்துள்ள ஆதரவு முடிவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். இண்டியா கூட்டணிக் கட்சிகள் திமுகவின் நிலைப்பாட்டுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பரபரப்பான அரசியல் சூழலில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி மு.க. ஸ்டாலினின் முடிவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, வரும் டிசம்பர் மாதத்திற்குள் இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால், தற்போதுள்ள மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறும் சூழல் உருவாகும் எனச் சுட்டிக்காட்டினார். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தியுள்ள நிலையில், தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்குப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை அவர் விளக்கினார்.

Advertisement

மேலும், “நாம் இப்போது இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.-க்களின் எண்ணிக்கை குறையும் அபாயமான சூழல் ஏற்படும்; தமிழ்நாடு அப்படிப் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்கு அடிப்படையில்தான் ஸ்டாலின் இதற்கு ஆதரவளித்ததாகக் கருதுகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் திமுக எடுத்துள்ள முடிவை அதிமுக பொதுச்செயலாளர் வெளிப்படையாக வரவேற்றுப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in