பாகுபலி படத்தின் பிரபலத்துடன்……! இணையும் ரஜினி… தரமான சம்பவம் வெயிட்டிங்…..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாகுபலி படத்தின் பிரபலத்துடன்……! இணையும் ரஜினி… தரமான சம்பவம் வெயிட்டிங்…..!!!

Published

on

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினி .71 வயது ஆனாலும் தற்போது வரை இவர் ஹீரோவாக நடித்து  அசத்தி   வருகிறார். நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து  வருகிறார். இதில் ரஜினிகாந்துடன், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர் . இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

 

Advertisement

திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதில் எது உண்மை என்பது தொடர்பான எந்த அறிவிப்பும்  இதுவரை வெளியாகவில்லை.

அது மட்டும் இல்லாமல் இயக்குனர் மணிரத்தினம் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு கதை ஒன்றை கூறியுள்ளதாகவும். அந்த கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ தற்போது ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் 170வது திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்குகிறார், என்று ஓரளவு உறுதியாகி உள்ளது.

Advertisement

ஏனென்றால் தலைவர் 170 திரைப்படத்தின் கதை விவாகரத்தில். பாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் ராஜமவுளின் தந்தை மற்றும் திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத் இணைந்துள்ளார். இவர்கள் தலைவர் 170 திரைப்படத்தின் கதை தொடர்பாக விவாதித்ததாகவும். இந்த திரைக்கதையில் இணைந்து அவர் பணியாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in