நடிகை ஸ்ரீபிரியா வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…. திரையுலகினர் இரங்கல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ஸ்ரீபிரியா வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…. திரையுலகினர் இரங்கல்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவர் முன்னணி நடிகரான ரஜினியுடன் 30 படங்களும் கமல்ஹாசன் உடன் 28 படங்களிலும் நடித்துள்ளார். அன்றைய காலத்தில் பல நடிகைகளுக்கும் தஃப் கொடுத்தவர் ஸ்ரீப்ரியா. நடிகையாக இருக்கும் போது நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நாகர்ஜூன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் உள்ளன.

தனது பெற்றோரைப் போல நடிப்பில் கவனம் செலுத்தாமல் மகன் மற்றும் மகள் என இருவருமே அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படித்தனர்.  இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் குடந்தை கிரிஜா பக்கிரி சாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் காதோடு தான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் நீயா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கிரிஜாவின் இறுதி சடங்கு இன்று மாலை மயிலாப்பூரில் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in