BREAKING: தவெக MLA சரவணனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்… பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தவெக MLA சரவணனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்… பெரும் பரபரப்பு..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சரவணனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதற்கான தகவலைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆளும் திமுகவில் இணைய மறுத்ததன் காரணமாகத் தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக சரவணன் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட வந்த பாதுகாப்பு தற்போது முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகக் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொகுதி மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in