“வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்தேன்… இப்போ மிரட்டுறாங்க..! ஸ்ரீவைகுண்டம் தவெக MLA மீது எழும் அடுத்தடுத்த புகார்கள்.. விஜய்யிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வாலிபர்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்தேன்… இப்போ மிரட்டுறாங்க..! ஸ்ரீவைகுண்டம் தவெக MLA மீது எழும் அடுத்தடுத்த புகார்கள்.. விஜய்யிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த வாலிபர்…!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புதுமனை அம்மாள்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வைணவ பெருமாள். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனுடன் நெருக்கமாகப் பழகி, அவரது தேர்தல் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றியவர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலவாரியத்தில் உறுப்பினர் பதவி பெற்றுத்தருவதாகக் கூறி எம்.எல்.ஏ சரவணன் ரூ.60 ஆயிரம் முன்பணம் கேட்டதாகவும், அதை நம்பி அதிக வட்டிக்கு கடன் வாங்கி வழங்கியதாகவும் வைணவ பெருமாள் குற்றம் சாட்டியுள்ளார்.

பணம் கொடுத்து ஒரு மாத காலமாகியும் பதவி கிடைக்காததால் விசாரித்தபோது முறையான பதில் கிடைக்கவில்லை என்றும், இதற்கிடையே அப்பதவி வேறொருவருக்கு வழங்கப்பட்டதை செய்தித்தாள் மூலம் அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேரில் சென்று எம்.எல்.ஏ சரவணனிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, பணத்தைத் தராமல் அச்சுறுத்தும் வகையில் பேசியதாகக் கண்ணீர் மல்க வைணவ பெருமாள் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்ததால் குடும்பத்துடன் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகக் கூறியுள்ள அவர், தனக்கு உரிய நீதி கிடைக்கவும் பணத்தை மீட்டுத் தரவும் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விவகாரம் குறித்து வைணவ பெருமாள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்திலும் தவெக பெண் நிர்வாகி ஒருவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in