CRIME
நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..! காதலனுடன் பைக்கில் சென்ற சிறுமி… 7 நாட்களுக்குப் பின் காட்டுக்குள் சடலமாக மீட்பு… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி..!!
17 வயது சிறுமி தனது காதலனை சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், இறுதியில் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உறவினர் வீட்டில் வசித்து வந்த சிறுமி, அங்கித் மால்வியா என்ற இளைஞரை சந்திக்கச் சென்றுள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி அந்த இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது உறுதியானது. இருவரும் பியோரா பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்கு பிறகு அங்கித் தனது உறவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். அந்த தொலைபேசி அழைப்பு பதிவுகளின் அடிப்படையில் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், சிறுமி காணாமல் போன ஏழு நாட்களுக்குப் பிறகு அவரது உடலை மீட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு ரம்பம் மற்றும் மரத்தில் கட்டப்பட்ட கயிறு ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய இளைஞர் அங்கித், லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததை ராஜ்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் தோலானி உறுதி செய்துள்ள போதிலும், கொலைக்கான சரியான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. முதன்மை சந்தேக நபரான இளைஞர் விபத்தில் இறந்துவிட்டதால், அவரது தொலைபேசி பதிவுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்தே போலீசார் விசாரணையை நகர்த்தி வருகின்றனர். காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதற்கான காரணம் மற்றும் வாக்குவாதத்தின் பின்னணி என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
