LATEST NEWS
ஜிம்மில் தொடங்கிய கள்ளக்காதல்… கணவனுக்கு மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. 3 வயது குழந்தையின் கண் முன்னேயே நடந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ஜிம்மில் தொடங்கிய நட்பு காதலாக மாறியதைத் தொடர்ந்து, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற மனைவியின் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரியா சர்மா என்ற பெண், தனது கள்ளக்காதலன் பிரதாப் என்பவனுடன் இணைந்து, தனது கணவன் சஷாங்கைக் கத்தியால் குத்தி கொடூரமாகத் தாக்கியுள்ளார். தனது கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட பிரியா, கணவனைக் கொலை செய்துவிட்டு இந்தச் சம்பவத்தைக் கொள்ளை நாடகமாக மாற்றத் திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொடூரச் சம்பவம் அரங்கேறியபோது, இத்தம்பதியின் 3 வயது பெண் குழந்தை இந்தத் தாக்குதல் முழுவதையும் நேரில் பார்த்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் பிரதாப் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜிம்மில் தொடங்கிய கள்ளக்காதலால் சொந்தக் கணவனையே மனைவியே தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
