சற்றுமுன்: “கரூரிலேயே கதையை முடித்திருந்தால்..” முதல்வர் குறித்து சர்ச்சையாகப் பேசிய திமுக கவுன்சிலர் அதிரடி கைது..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சற்றுமுன்: “கரூரிலேயே கதையை முடித்திருந்தால்..” முதல்வர் குறித்து சர்ச்சையாகப் பேசிய திமுக கவுன்சிலர் அதிரடி கைது..!!!

Published

on

வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட சமயத்தில், “கரூரிலேயே கதையை முடித்திருந்தால்…” என்று டீட்டா சரவணன் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சர்ச்சைப் பேச்சு தொடர்பாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் டீட்டா சரவணன் மீது நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த முற்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த கவுன்சிலர் டீட்டா சரவணன், கைது நடவடிக்கைக்குப் பயந்து உடனடியாகத் தலைமறைவானார்.

Advertisement

இதையடுத்து, தலைமறைவாக இருந்த கவுன்சிலரைக் பிடிக்கக் காவல்துறையினரால் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டையின் முடிவில், விழுப்புரம் பகுதியில் பதுங்கியிருந்த டீட்டா சரவணனைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து, தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in