LATEST NEWS
அதைக் கூற ஏன் பயப்பட வேண்டும்?…. மகன் செய்த செயலால் கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு…. வைரல்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர்களில் ஒருவர் தான் உதயநிதி. தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனான இவ்வாறு சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார். அதே சமயம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். அமைச்சரான பிறகு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அவரின் மனைவி கிருத்திகாவும் சினிமாவில் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது உதயநிதிக்கு பதில் அவர் ரெட் ஜெயன்ட் பொறுப்பை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயநிதியின் மகன் இன்ப நிதி சமீபத்தில் தன்னுடைய தோழியுடன் நெருக்கமாக இருக்கும் மிரர் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்ப நிதியின் தாய் கிருத்திகா ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். அதில்,காதலை வெளிப்படுத்த யாரும் பயப்பட வேண்டாம் என்றோம் இயற்கையின் மகத்துவத்தை அது புரிந்து கொள்ளும் ஒரு வழி இதுவும் ஒன்றுதான் என அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனைப் பார்த்த பலரும் மகனின் அந்த புகைப்படத்தை பார்த்து தான் இவர் இப்படி ஒரு கருத்தை போட்டு உள்ளாரா என விமர்சித்து அந்த பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.
Don't be afraid to love and express it. It's one of the ways to understand nature in it's full glory.
— kiruthiga udhayanidh (@astrokiru) January 5, 2023
