பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பசங்க பட நடிகரின் திருமணம்….. இணையத்தை கலக்கும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பசங்க பட நடிகரின் திருமணம்….. இணையத்தை கலக்கும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்….!!!!

Published

on

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்த கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அண்மையில் வழங்கப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து துரோகி மற்றும் கோலி சோடா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து கிஷோர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ப்ரீத்தி நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளர் மற்றும் மாடல் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் லட்சுமி வந்தாச்சு மற்றும் பிரியமானவள் போன்ற பல சீரியல்களிலும் நடித்த இவருக்கு தற்போது 34 வயது ஆகின்றது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிஷோர் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

நடிகை ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

அதனை தொடர்ந்து லட்சுமி கல்யாணம், கேளடி கண்மணி மற்றும் தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் நடைபெற்று உள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in