LATEST NEWS
தமிழ் சினிமா நடிகர்களின் குழந்தைகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் உள்ளனர். முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்நிலையில் தமிழ் நடிகர்களின் குழந்தைகள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மேடைகளில் காமெடியனாக கலக்கி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் தான் விஷ்ணு விஷால். இவர் விளையாட்டு வீராங்கனை ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு ஆர்யன் என பெயர் சூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இவர் சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தல என்று அனைத்து ரசிகர்களாலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் ஏகே 62 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இவர் நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகராக திகழ்ந்தாலும் சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டு ஏராளமான மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் தான் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் விக்ரம். இவரை அனைவரும் அன்பால் சியான் விக்ரம் என்று அழைப்பார்கள். இவரின் மகன் துருவ் விக்ரம் தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகர் விக்ரமிற்கு ஒரு மகளும் உள்ளார்.
தமிழ் சினிமாவில் மேடி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் தான் மாதவன். குறிப்பாக பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர். இவரின் மகன் நீச்சல் போட்டிகளில் அதிக அளவு கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிக அளவு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு பூஜா மற்றும் மேக்னா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு இரண்டாவதாக பென்னி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் உள்ளார்.
தமிழ் சினிமா முதல் கோலிவுட் வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் கார்த்தி. நடிகர் சூர்யாவின் உடன் பிறந்த தம்பியான இவர் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஒன்றாக நடித்த காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகளின் இவர்களும் ஒருவர். பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அறியப்படுபவர் தான் நடிகர் அர்ஜூன். தற்போது இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அதில் முதல் மகள் ஐஸ்வர்யா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
