பிக்பாஸ் பிரபலத்துடன் நயன்தாரா எடுத்த புகைப்படம்…. வயதான தோற்றத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் பிரபலத்துடன் நயன்தாரா எடுத்த புகைப்படம்…. வயதான தோற்றத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் நடிகை நயன்தாரா.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் கனெக்ட், இறைவன் மற்றும் நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் முதன்முதலாக ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி மற்றும் அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் இறைவன் மற்றும் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வாலுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் நம்ம நயனுக்கா இந்த நிலைமை எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே, வயது முதிர்ந்த தோற்றம் போல் உள்ளது எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in