LATEST NEWS
விஜய் இன்ஸ்டாவில் வந்ததும் முதலில் பாலோ செய்த நடிகை யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் ட்விட்டரில் இருந்தாலும் தனது பட போஸ்டர்களை மட்டுமே பதிவு செய்வார். மற்றபடி இதுவரை எதுவும் அவர் பதிவு செய்தது கிடையாது.
தற்போது நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் instagram பக்கத்தில் கணக்கு தொடங்கினார். அவர் வந்த சில மணி நேரத்திலேயே பாலோயர்ஸ் குவிந்தனர். இன்று காலை நிலவரப்படி நான்கு மில்லியன் ஃபாலோயர்ஸ் விஜய்யின் இன்ஸ்டால் பக்கத்தில் உள்ளனர்.
இன்ஸ்டால் கணக்கு தொடங்கியவுடன் சில நொடிகளிலேயே அதிக பாலோவர்கள் கொண்ட பிரபலங்களில் விஜய் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் விஜய் இன்ஸ்டால் கணக்கு தொடங்கியவுடன் அவரை இன்ஸ்டால் முதலில் பாலோ செய்த பிரபலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் எனவும் கூறப்படுகின்றது.
