LATEST NEWS
சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மேட்சை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
10 அணிகள் மோதும் 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதிய ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது.
அதில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் போட்டி இது என்பதால் அதனை காண ஏராளமான சினிமா பிரபலங்கள் வருகை தந்தனர்.
அதாவது தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதரிப்பதற்காக மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்து போட்டியை காண வந்தனர்.
அதனைப் போலவே சிஎஸ்கே போட்டியை காண்பதற்கு சென்னை சேப்பாக்கம் மைதானம் வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன் அமர்ந்து போட்டியை ரசித்தார்.
சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகைகளில் ஒருவரான நடிகை யாஷிகா ஆனந்த் குக் வித் கோமாளி பிரபலம் குரேஷியுடன் இணைந்து போட்டியை கண்டு களித்தார்.
அதனைப் போலவே மௌன ராகம் சீரியலில் நடித்த பிரபலமான குக் வித் கோமாளையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ரவீனா கலந்து கொண்டார்.
மேலும் ரவீனாவுடன் நடன இயக்குனர் மணியும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இணைந்து குரேஷியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
மேலும் விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்,கலக்கப்போவது யாரு பிரபலம் சரத்துடன் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை கண்டு களித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகையான சரத்குமார் மகள் வரலட்சுமி சிஎஸ்கே ஜெர்சி அணிந்து போட்டியை கண்டு களித்தார்.
தமிழ் சினிமாவில் மேயாத மான், ஆடை போன்ற பல திரைப்படங்களின் இயக்குனரும் மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான ரத்தினகுமார் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை கண்டு களித்தார்.
தளபதி விஜயின் பிகில், கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன லவ் டுடே போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்தார்.
இவ்வாறு பல பிரபலங்களும் சிஎஸ்கே அணியின் போட்டியை நேற்று கண்டு களித்த நிலையில் அதை தொடர்பான பல புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகிறது.
