மருமகளுடன் இணைந்து அந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பாக்கியா…. வேற லெவல் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருமகளுடன் இணைந்து அந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பாக்கியா…. வேற லெவல் வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி.

இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் தான் பாக்கியலட்சுமி என்ற சுசித்ரா. இந்நிலையில் சீரியல்களில் குடும்பப் பெண் போல இருக்கும் பாக்யா வெளியில் அதற்கு மாறாக உள்ளார். அதாவது தனக்கு மருமகளாக இருக்கும் ரித்திகா உடன் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

https://youtu.be/6McKihjqgnQ

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in