மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய குஷ்பு…. உடல்நிலை குறித்து அவர் போட்ட முதல் பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய குஷ்பு…. உடல்நிலை குறித்து அவர் போட்ட முதல் பதிவு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை. இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன.

Advertisement

இதனிடையே சமீபத்தில் குஷ்பு மருத்துவமனையில் அடினோ வைரஸ் என்ற தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் இந்த தகவல் சினிமா திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் குஷ்பூ உடல்நிலை தேறியதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in