LATEST NEWS
க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் லவ் டுடே இவானா…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
இந்த வருடம் கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இவானா, சத்யராஜ் மற்றும் ராதிகா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 90 கோடி வசூல் செய்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் இவானா. இன்னும் சொல்லப்போனால் இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
