முகத்தில் துளி மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை வனிதா…. எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முகத்தில் துளி மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை வனிதா…. எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார்.

அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம்  youtube சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மேக்கப் செய்வதிலும் வனிதா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகின்றார். தற்போது இவர் தனியாக boutique ஒன்றை திறந்து உள்ளார். அதனால் முன்பு போல் இல்லாமல் தற்போது வனிதா மிகவும் மார்டனாக மாறிவிட்டார்.

இந்நிலையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா வெளியில் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது ஒரு நடிகையின் சிலைக்கு பக்கத்தில் நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வனிதா துளியும் மேக்கப் இல்லாமல் உள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அக்கா நீங்க மேக்கப் இல்லாமலும் அழகா தான் இருக்கீங்க என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in