LATEST NEWS
அட நம்ம கோபியா இது?…. பாக்கியவுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி.
இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் குடும்ப தலைவியாக இருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கட்டிக் காக்கும் பாக்யாவின் இந்த குடும்ப கதை ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் தான்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கதாநாயகனாக நடித்து வரும் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ராதிகா மற்றும் கோபி இடையே சண்டை முற்றிய நிலையில் பாட்டி மீண்டும் கோபியை தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.
அப்போது வரும் வழியில் செழியனின் கண்ணில் குடித்துவிட்டு அகப்பட்ட கோபியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி கோபி மனைவி பாக்யாவுடன் இணைந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், கோபிக்கு இப்பதான் புத்தி வந்துள்ளது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
