கர்ப்ப கால நினைவுகள் …. நிறைமாத வயிற்றுடன் போட்டோ ஷூட் நடத்திய பூஜா ராமச்சந்திரன்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்ப கால நினைவுகள் …. நிறைமாத வயிற்றுடன் போட்டோ ஷூட் நடத்திய பூஜா ராமச்சந்திரன்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான துணிவு  திரைப்படத்தில் சார் பட்டா பரம்பரை படத்தின் புகழ் ஜான் கொகன் முக்கிய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரின் மனைவி பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக தன்னுடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மலையாள நடிகரான ஜான் கோகென் என்பவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்கள் இருவருமே ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜோடி என்பதால் திருமணத்திற்கு பிறகும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து பல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார். கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தார்.

Advertisement

கடந்த மாதம் தான் பூஜாவுக்கு மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு நடந்து முடிந்தது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாது.

அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குழந்தை பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும்போது தனது காதல் கணவருடன் வீக் எண்டை ஜாலியாக கடற்கரை ரெஸ்டாரண்டில்  புகைப்படங்களை பூஜா ராமச்சந்திரன் பகிர்ந்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் கர்ப்ப கால நினைவுகளாக பூஜா ராமச்சந்திரன் நிறைமாத வயிற்றுடன் தனது கணவருடன் போட்டோ சூட் நடத்திய இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அந்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிவேகமாக பரவி வருகிறது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in