நம்ம பழைய ஜோக் தங்கதுரையின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நம்ம பழைய ஜோக் தங்கதுரையின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. அழகிய குடும்ப புகைப்படங்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தங்கதுரை. இவரின் சொந்த ஊர் சென்னை.

கல்லூரி படிக்கும் போதே மிமிக்ரி, ஸ்டாண்ட் அப் காமெடி மற்றும் கானா பாடல் என பல திறமைகளை கொண்டிருந்தவர்.

Advertisement

அதே சமயம் சின்ன சின்ன நிகழ்ச்சிகளிலும் கல்லூரி மேடைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

பின்னர் காமெடி நிகழ்ச்சிக்காக நடந்த ஆடிஷனில் தனது நண்பர்களின் உதவியால் பங்கேற்று நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்வானார்.

Advertisement

பயோ டெக்னாலஜி படித்துள்ள இவர் கலைத்துறையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

இவரை நண்பர்கள் டைகர் கார்டன் தங்கதுரை என்றுதான் அழைப்பார்கள். அதற்கு காரணம் அவர்களின் குடும்பமே புளியந்தோப்பு பக்கத்தில் உள்ளனர்.

Advertisement

கலக்கப்போவது யாரு முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பழைய ஜோக் தங்கதுரை. இவருடைய ஜோக்குகள் எல்லாம் பழசாவும் போர் அடிக்கிற மாதிரியும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக இவர் சொன்ன புளிய மரத்து அடியல புஷ்பலதா மடியல என்ற ஜோக் வேற லெவலில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் பிரபலமான தங்கதுரை சினிமா துறையிலும் கூட நடித்து வருகிறார்.

Advertisement

இவருக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிக்க கூடியவர். தமிழ் திரையுலகில் எங்கேயும் எப்போதும், மாநகரம், இன்று நேற்று நாளை மற்றும் அட்டகத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

என்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் இவர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இதனிடையே தங்கதுரை அருணா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் தங்கதுரை தன்னுடைய குழந்தை சம்பந்தமாக எந்த ஒரு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதில்லை. அதன் பிறகு சில நாட்கள் கழித்து குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

Advertisement

தற்போது டைகர் தங்கதுரையின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in