LATEST NEWS
இது வேற லெவல்…. முதல்முறையாக விவசாயத்தில் மாபெரும் புரட்சி செய்த நடிகர் மாதவன்…. பலரும் பார்க்காத வைரல் புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது.
மேலும் இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, செர்பியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இதனிடையே மாதவனுக்கு வேதாந்த் மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்க பதக்கங்களை குவித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சினிமாவில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் மாதவன் ஈடுபட்டு வருகிறார்.
அவர் தன்னுடைய தரிசு நிலத்தில் உள்ள தோட்டத்தில் தென்னங்கன்றுகளை நட்டு உள்ளார். இதில் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்த தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை யார் வேண்டுமானாலும் பறிக்கலாம்.
அந்த அளவிற்கு கைகேட்டும் தூரத்தில் தேங்காய்கள் காய்த்து தொங்குகின்றன. அதேசமயம் விவசாயத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் தன்னுடைய தோட்டத்தில் பல காய்கறிகளையும் விவசாயம் செய்து வருகிறார்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
