வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா பிரபலங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு பட்டியல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா பிரபலங்கள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு பட்டியல்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்கள் வாடகை தாய் மூலம் சமீபத்தில் குழந்தை பெற்றது பெரும் பேசும் பொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமா பிரபலங்கள் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

சன்னி லியோன் டேனியல் வைபர்:

Advertisement

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் சன்னி லியோன் உலகம் முழுவதும் தனது கவர்ச்சி நடிப்பால் பிரபலமாகியுள்ளார். இவர் இறுதியாக ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் டேனியல் வைபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டனர். மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அதில் இரட்டை ஆண் குழந்தைகள் இவர்களுக்கு பிறந்தன.

ஷாருக்கான் கௌரி கான்:

Advertisement

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ஷாருக்கான் கௌரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு. இவர்களின் இளைய மகன் அப்ரான் வாடகைத்தாய் மூலம் பிறந்த இரண்டாவது குழந்தையாகும்.

அமீர்கான் – கிரண் ராவ்:

Advertisement

பாலிவுட் நட்சத்திரமான அமீர்கான் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆஷாத் ராவ் கான் என்ற மகனை வாடகை தாயின் மூலம் பெற்றுக் கொண்டனர்.

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்திரா:

Advertisement

பாலிவுட் நடிகை மற்றும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மூலம் கிரிக்கெட் திரை உலகில் தடம் பதித்த ஷில்பா ஷெட்டி ராஜ் குந்திரா தம்பதியினர் இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டனர்.

ப்ரீத்தி ஜிந்தா – ஜீன் குட் இனாஃப்:

Advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

பிரியங்கா சோப்ரா:

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் வரை சென்றுள்ள இவர் பாப் பாடகர் ஆன நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்.

கரண் ஜோஹர்:

Advertisement

பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாலிவுட் நடிகரான இவர் 2017 ஆம் ஆண்டு வாடகை தாயின் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா கடந்த வருடம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள் ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in