ரம்ஜானை வேற லெவலில் கொண்டாடிய தமிழ் சினிமா பிரபலங்கள்…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரம்ஜானை வேற லெவலில் கொண்டாடிய தமிழ் சினிமா பிரபலங்கள்…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!

Published

on

இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் ரம்ஜான். ஈகை திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய நாள்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அதன்படி இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவ்வாறு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஊர் வம்பு லட்சுமி. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இவர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனிலும் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து அவர் புடவையில் அழகான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள சிருஷ்டிகா அர்ஜுன் அழகான உடையில் புகைப்படம் வெளியிட்டு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான வில்லின் நடிகையான தீபா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரம்ஜானை கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான விஜயலட்சுமி புடவையில் க்யூட்டான புகைப்படத்தை பகிர்ந்து ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் நதியா க்யூட்டான உடையில் ரம்ஜானை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவரான நடிகை பிரியா பவானி சங்கர் அண்மையில் பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் சிம்பிளான லுக்கில் இன்று பிரியாணியுடன் ரம்ஜானை கொண்டாடியுள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிம்பு ரம்ஜான் தொழுகை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை பாவனா வெள்ளை நிற உடையில் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

குக் வித் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழ் தனது மனைவி பென்சியுடன் ரம்ஜானை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

சீரியல் நடிகையான மைனா நந்தினி சமீபத்தில் விஜய் டிவியில் முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவர் தனது கணவருடன் ரம்ஜானை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in