மறைந்த விவேக்கை மீண்டும் உயிரோடு கொண்டு வர போகும் இயக்குனர் ஷங்கர்…. இந்தியன் 2 படத்தில் புதிய தொழில்நுட்பம்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த விவேக்கை மீண்டும் உயிரோடு கொண்டு வர போகும் இயக்குனர் ஷங்கர்…. இந்தியன் 2 படத்தில் புதிய தொழில்நுட்பம்….!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் தான் விவேக். இவரை காமெடியில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அந்த அளவிற்கு தன்னுடைய நகைச்சுவையான பேச்சாள் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர். இப்படி பல புகழுக்குரிய இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் இவர் இல்லாமல் அனைவரும் மிகுந்த சோகத்தில் தான் உள்ளனர். இவர் சினிமாவில் காமெடி செய்வது மட்டுமல்லாமல் பல நல்ல காரியங்களையும் செய்துள்ளார்.

Advertisement

அவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பேரிழப்பு தான். இந்நிலையில் விவேக் இறுதியாக சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தியன் டு படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் நடித்த காட்சிகள் நிச்சயமாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதனைப் போலவே அவர்கள் இருவரும் நடிக்க இருந்த மீதமுள்ள காட்சிகளில் வேறு நடிகர்களை நடிக்க வைத்து ஒரு உலகளாவிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த நடிகர்களின் உருவத்தை விவேக் உருவமாகவும் நெடுமுடி வேணு உருவமாகவும் மாற்ற பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விவேக் இன்னும் நான்கு நாட்கள் நடிக்க வேண்டியது உள்ளதால் அதற்கு சங்கர் இப்படி ஒரு பிரம்மாண்டமான முடிவை எடுத்துள்ளாராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in