காதல் மனைவியின் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய சீரியல் நடிகர் மதன்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் மனைவியின் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய சீரியல் நடிகர் மதன்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரியல் லைஃபில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவ்வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ரேஷ்மா.

இவர் அதே சேனலில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

Advertisement

அதன் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த சீரியலில் இவருடன் கதாநாயகனின் தம்பியாக நடித்து வந்தவர் மதன். இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

Advertisement

இருந்தாலும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்ததன் மூலம் தான் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

பின்னர் சில நாட்கள் கழித்து இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவியது. அதனை அவர்களும் உறுதி செய்தனர்.

Advertisement

இவர்களின் காதல் இரு விட்டாருக்கும் தெரிய வர, அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் ஜோடியாக நடித்தனர்.

Advertisement

இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்து வருவதாலேயே அந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் இந்த சீரியல் நிறைவு பெற்றது. இந்த நிலையில் ரேஷ்மா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அதற்கு மதன் வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

Advertisement

அதை தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in