தனி விமானத்தில் ஆந்திரா சென்ற நடிகர் ரஜினி…. நேரில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த ஆந்திரா சூப்பர் ஸ்டார்… வைரலாகும் புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனி விமானத்தில் ஆந்திரா சென்ற நடிகர் ரஜினி…. நேரில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த ஆந்திரா சூப்பர் ஸ்டார்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு பெறாத நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அதேசமயம் அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அரசியலிலும் ஈடுபட இருந்த ரஜினி தனது உடல்நிலை காரணமாக அதிலிருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் ரஜினி நேற்று மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisement

அதற்காக அவர் நேற்று தனி விமானத்தில் ஆந்திரா சென்றார். ரஜினி அரசியலுக்கு வர திட்டமிருந்தபோது சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியானது.

இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்றும் அதன் குறித்த ரஜினி சந்திர பாபு நாயுடு விடம் ஆலோசனை கேட்டதாகவும் கூறப்பட்டது.

Advertisement

இந்நிலையில் ஆந்திரா சென்ற நடிகர் ரஜினிக்கு நாம் மாநில முன்னாள் அமைச்சர் சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளித்தார்.

தமிழகத்திலிருந்து விஜயவாடா சென்ற ரஜினிக்கு விமான நிலையத்தில் நடிகர் பாலகிருஷ்ணா சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

ரஜினிக்கு பொன்னாடை அணிவித்து பாலகிருஷ்ணா வரவேற்றார். அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக என்டிஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in