LATEST NEWS
பொன்னியின் செல்வன் சிறுவயது குந்தவை இந்த பிரபலத்தின் மகளா?…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.
கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 4 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அதிக ஸ்கோப் திரிசாவின் குந்தவை கதாபாத்திரத்தில் இருந்தது.
ஆனால் இரண்டாம் பாகத்தில் அந்த அளவிற்கு பெரிதாக இல்லை என்று ரசிகர்கள் கூறினார்.
இருந்தாலும் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் குந்தவையின் சிறு வயது கதாபாத்திரத்தில் நிலா என்பவர் நடித்திருந்தார்.
அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை கவிதா பாரதி நடிகர் கன்யா பாரதியின் மகள்தான். தெய்வம் தந்த வீடு சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டியவர் தான் கவிதா பாரதி.
மலையாள சீரியல் நடிகை ஆன இவர் தமிழில் அவளும் பெண்தானே சீரியல் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அஞ்சலி, லட்சுமி, கஸ்தூரி மற்றும் செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
அதேசமயம் இவரின் கணவர் கன்யா பாரதியும் சீரியல் மற்றும் சினிமாக்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார்.
இந்த நட்சத்திர தம்பதியின் அழகான மகள் தான் குட்டிக் குந்தவையாக முதல் படத்திலேயே மணிரத்தினம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்.
தற்போது தனது பெற்றோர்களுடன் நிலா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
