புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் நடிகை சோனாலி இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் நடிகை சோனாலி இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?… லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!

Published

on

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான பம்பாய் திரைப்படத்தில் ஹெம்மா ஹெம்மா என்ற பாடலுக்கு நடனம் ஆகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சோனாலி பிந்த்ரே.

ஹிந்தி நடிகையான இவர் பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் தமிழில் குணால் நடித்த காதலர் தினம் மற்றும் அர்ஜுன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

குறிப்பாக காதலர் தினம் படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளார்.

இப்படி பிசியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

Advertisement

இதற்காக நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று உடல்நலம்  தேறினார்.

எனக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அடிக்கடி தனக்கு போன் செய்து நலம் விசாரித்து தனக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் சோனாலி கூறி இருந்தார்.

Advertisement

அதே சமயம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கீமோ சிகிச்சைக்காக மொட்டை அடித்துக் கொண்டார்.

அப்போது அவர் கண்ணீர் விட்டு உருக்கமாக பேசி இருந்தார். அதன் பிறகு சிகிச்சைக்கு பின்னர் விக்வைத்துக் கொண்டு புதிய தோற்றத்தில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Advertisement

அதே சமயம் கீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிக்கப்பட்டது எனவும் அதிர்ச்சி தகவலை அவர் பகிர்ந்திருந்தார்.

அதன் பிறகு சில நாட்களில் குணமடைந்த அவர் புற்றுநோயிலிருந்து மீண்டது குறித்து உருக்கமான பதிவுகளையும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

Advertisement

இவருக்கு அதே சமயம் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அடிக்கடி ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் 48 வயதாகும் சோனாலி புற்றுநோயிலிருந்து தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.

Advertisement

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in