LATEST NEWS
அட நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி வளந்துட்டாரே…. லேட்டஸ்ட் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய நடிகைகளின் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சௌந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். அதன் பிறகு பல சாமி திரைப்படங்களிலும் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படத்தில் இவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியுடன் மீண்டும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 1985 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் தற்போது வரை அதே இளமையுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இதனிடையே நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் ஐபிஎல் மேட்ச் பார்க்க சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ரம்யா கிருஷ்ணன் மகன் நன்றாக வளர்ந்து விட்டாரே எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
