தன்னைவிட 7 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட…. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன்னைவிட 7 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட…. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, வில்லா, ஜிகர்தண்டா மற்றும் மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கும் மற்றும் பில்லா ரங்கா என்ற ஒரு தெலுங்கு திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார்.

Advertisement

அதே சமயம் இவர் இசையமைத்த சூது கவ்வும் திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வென்றுள்ள பெருமை இவருக்கே சேரும். அதன் பிறகும் பல விருதுகளுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

திருச்சிராப்பள்ளி ஆர் எஸ் கே மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் ஜெ ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிஇ கணினி அறிவியல் மற்றும் பொறியியல் முடித்துள்ளார்.

Advertisement

தன்னுடைய கல்வியை முடித்த பிறகு அவர் ஒரு ரெக்கார்டிங் இன்ஜினியரிங், ஏற்பாட்டாளர் மற்றும் ப்ரோக்ராமராக பணியாற்றினார்.

அதன் பிறகு அத்வைதம் என்ற தெலுங்கு குறும்படத்திற்கான இரண்டு அசல் பாடல்களை இவர் இசையமைத்தார்.

Advertisement

சினிமாவில் இசையமைக்க வந்த குறுகிய காலத்தில் 20 படங்களுக்கு மேல் இவர் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஏ ஆர் ரகுமானின் ஸ்லம்டாக் மில்லியனர் படம் தான்.

படங்களைப் பார்த்தால் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பின்னணி இசைக்கி அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

Advertisement

இவர் விஜயின் பைரவா, தனுஷ்க்கு கொடி, வடசென்னை, மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் காலா மற்றும் பரியேறும் பெருமாள் என தன்னை படத்திற்கு படம் மெருகேற்றிக் கொண்டே வருகின்றார்.

இவர் படங்களில் வரும் ஒவ்வொரு பாடல்களையும் ஒரு ஒரு ஸ்டைலில் இசை கோர்த்து அழகு பார்த்திருப்பார். இப்படி பல புகழுக்குரிய இவர் மீனாட்சி அய்யர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு தீக்ஷிதா வெங்கடேசன் என்ற ஒரு மகள் உள்ளார். இவரும் ஒரு பிரபல பாடகி தான். அடுத்தடுத்து படங்கள் மற்றும் தொடர் ஹிட்கள் என பிசியாக இருக்கும் இவரின் பக்கபலம் அவர் மனைவி மீனாட்சி தான். சந்தோஷ் நாராயணனுக்கு தற்போது 40 வயதாகும் நிலையில் அவரின் மனைவி இவரை விட ஏழு வயது மூத்தவர்.

அதாவது அவருக்கு தற்போது 47 வயதாகும். இந்நிலையில் சந்தோஷ் நாராயணனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in