உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா 2023 பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டின் கேன் திரைப்பட விழா தற்போது தொடங்கியுள்ளது.

இந்த வருடம் நடைபெறும் 76 ஆவது கேஸ் திரைப்பட விழா இன்று முதல் மே 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து திரைப்படங்கள் மற்றும் ஆவண படங்கள் திரையிடப்படும்.

Advertisement

அதில் இந்தியாவில் இருந்து இந்த முறை மூன்று திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி படம் மிட்நைட் ஸ்கிரீனிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த ஆக்ரா திரைப்படம் போர்ட் நைட் பிரிவிலும், மணிப்பூரில் 1990 ஆம் ஆண்டு வெளியான இஷானோ திரைப்படம் ஆகியவை திரையிடப்பட உள்ளன.

Advertisement

குறிப்பாக இந்த விழாவின் பிரபலமாக இருக்கும் சிறப்பு கம்பளம் ஷோவில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சாரா அலி கான், அனுஷ்கா ஷர்மா மற்றும் திருநாளினி தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த திரைப்பட விழாவில் இந்திய அரசு சார்பாக மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு கலந்து கொண்டுள்ளது.

Advertisement

அதனைப் போலவே இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், நடிகைகள் நயன்தாரா, தமன்னா, வாணி திரிபாதி மற்றும் பூஜா ஹெக்டே, நடிகர்கள் மாதவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

இன்று தொடங்கிய இந்த விழாவில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் விழாவின் சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.

Advertisement

நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரின் பாதையை பின்பற்றி இவர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து பலரையும் வெகுவாக கவர்ந்தார்.

தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in