LATEST NEWS
தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில்… கபில்தேவ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ரஜினி….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கின்றார்.
அந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மும்பையில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரஜினி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் ரஜினியின் லால் சலாம் கெட்டப்பில் இருக்கின்றார். கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவது என்னுடைய பாக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
