LATEST NEWS
மறைந்த நடிகர் இதயம் முரளியின் 59 ஆவது பிறந்தநாள் இன்று…. வெளியான குடும்ப புகைப்படங்கள்….!!
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் தான் நடிகர் முரளி.கன்னட திரைப்படங்களின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமான இவர் பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1964 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி பிறந்த இவர் 1984 ஆம் ஆண்டு பிரேம பர்வா என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
அதன் பிறகு தமிழில் பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இயக்குனர் மணிரத்தினத்தின் முதல் தமிழ் படமான பகல் நிலவு திரைப்படத்தில் கதாநாயகனாக முரளி நடித்து அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து புதுவசந்தம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் முரளி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
குறிப்பாக காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த முரளியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக இதயம் திரைப்படம் அமைந்தது.
அந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு இவர் இதயம் முரளி என்று தான் அனைவராலும் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவாஜி, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக 2000 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதை பெற்றார்.
இவர் இறுதியாக தனது மூத்த மகன் அதர்வா நாயகனாக நடித்த பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
தன்னுடைய இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த இவர் 2010 ஆம் ஆண்டு தன்னுடைய 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் அவரின் மூத்த மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில் மறைந்த நடிகர் முரளியின் 59வது பிறந்தநாள் இன்று என்பதால் அவரின் சில குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
