LATEST NEWS
உடல் எடையை குறைத்து செம ஸ்மார்ட்டாக மாறிய நடிகர் அஜித்…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கம் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் முதல் முறையாக திரைப்படத்தின் மூலம் அஜித் உடன் கைகோர்த்துள்ளது.
இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் ஆனால் என்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் நடிப்பையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, துப்பாக்கி சுடுவது மற்றும் கார் ரேஸ் என அனைத்திலும் கலந்து கொண்டு வருகிறார் நடிகர் அஜித்.
இவர் பைக் ரைடிங் செல்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். துணிவு படப்பிடிப்பிற்கு இடையே இமயமலை பகுதிக்கு பைக் ரைடு சென்று இருந்தார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நேபாளம் சுற்றுப்பயணம் சென்று இருந்தார். மேலும் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தையும் சமீபத்தில் அஜித் தொடங்கினார்.
இந்நிலையில் உடல் எடை கூட இருந்த நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது அவர் தனது ரசிகருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
