LATEST NEWS
கவர்ச்சி நடிகை யாஷிகாவுடன் காதல்?… புது போட்டோவுடன் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் திடீர் விளக்கம்…!!
பிரபல நடிகரான அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினியின் உடன் பிறந்த சகோதரர்தான் ரிச்சர்ட் ரிஷி. இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். அதே சமயம் பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் ஹீரோவாக நடித்துள்ளார்.
சமீபத்தில் பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகாவுடன் இவர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ரிச்சர்ட் ரிஷி ஒரு புது புகைப்படத்தை வெளியிட்டு இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் யாஷிகாவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு cut என பதிவிட்டுள்ளார். அதாவது இருவரும் ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடித்து வருவதாகவும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் வெளியிட்டதாகவும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
