பிளாக் பியூட்டி, லேடி சிவாஜி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 80s நடிகை சரிதாவின் அன்ஸீன் போட்டோஸ்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிளாக் பியூட்டி, லேடி சிவாஜி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 80s நடிகை சரிதாவின் அன்ஸீன் போட்டோஸ்..

Published

on

தமிழ் சினிமாவில் 80s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  நடிகை சரிதா. இவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்.இவர் 1978 ஆம் ஆண்டு ‘மரோ சரித்ரா’ என்ற  தெலுங்கு படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் 1978ஆம்  ஆண்டு ‘அவள் படித்தாள்’ என்ற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில்  அதிகமான படங்களில் நடித்துள்ளார் .

Advertisement

இவர் தமிழில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை, போன்ற பல ஹிட் படங்களில்  நடித்துள்ளார். 1970 லிருந்து 80களில் வரை முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் நடிகை சரிதா.இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் 140 மேற்பட்ட  திரைபடங்களில் நடித்துள்ளார்.நடிகை சரிதா தெலுங்கு நடிகரான வெங்கடேஷ் சுப்பையாவை 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு இருவர்களுக்கு இடையே ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டின் காரணமாக 1976ஆம் ஆண்டு  விவாகரத்து பெற்றனர்.

Advertisement

அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகரான முகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.நடிகர் முகேஷ் தமிழில் ஐந்தாம்படை, ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இருவர்களுக்கு இடையே ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டின்  காரணமாக  2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ,நக்மா போன்ற  பல  நடிகைகளுக்கு  டப்பிங் கொடுத்துள்ளார் . தற்போது இவர் தன் மகனுடன் துபாயில் வசித்து வருகிறார்.இவரின் குடும்ப புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in