LATEST NEWS
முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தென்னிந்திய நடிகர் இவரா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே….!!
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர்கள் ஏராளம். அப்படி முன்னணி நடிகர்களாக வளம் வரும் நடிகர் பலரும் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அதேசமயம் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு சம்பளத்தையும் சமீபத்தில் உயர்த்திக்கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய சினிமா அளவில் முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் யார் சம்பளம் வாங்கியது என்பது குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி தான் முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான Aapadbandhavudu என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்காக இவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இவர்தான் இந்திய அளவில் முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
