LATEST NEWS
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும்… நடிகைகளின் வயது என்ன தெரியுமா..???
தமிழ் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகைகள் ஏராளம். 90களில் முன்னணி நடிகைகளாக கொடி கட்டி பறந்தவர்கள் தற்போது அம்மா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர். அதுவே குறைந்த வயது கொண்ட நடிகைகளும் தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடிக்கும் அம்மா நடிகைகளின் வயது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை ரோகினி:
தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோயினியாக அறிமுகமான இவர் தற்போது அம்மாவாக சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக தனுஷின் 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் அம்மாவாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு 53 வயது.
நடிகை பானுப்பிரியா:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் நடித்து 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் பானுப்பிரியா. இவர் தற்போது பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார். இவருக்கு வயது 56.
நடிகை அனுபாமா குமார்:
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஹீரோயினியாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை அனுபாமா குமார். இவர் தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்போது 48 வயது.
நடிகை கோவை சரளா:
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அந்த அளவிற்கு தன்னுடைய நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். குணச்சித்திர கதாபாத்திரம் என தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமாகிய இவர் தற்போது பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு வயது 61.
நடிகை ஜெயசுதா:
சினிமாவில் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஜெயசுதா தற்போது அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் விஜயின் அம்மாவாக நடித்திருந்தார். இவருக்கு தற்போது 64 வயது.
நடிகை ஸ்ரீரஞ்சனி:
தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரஞ்சனி பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார். இவருக்கு தற்போது 51 வயது.
நடிகை ரேணுகா:
தற்போது அம்மா கதாபாத்திரங்களில் பெரும்பாலும் சிறு பட்ஜெட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பல திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 59 வயது.
நடிகை நதியா:
90களில் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த ஏராளமான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நதியா. இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார். இவருக்கு தற்போது 56 வயது ஆகும் நிலையில் இன்னும் இளமையாகவே உள்ளார்.
நடிகை மீரா கிருஷ்ணன்:
தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மீரா கிருஷ்ணன். தற்போது இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இவருக்கு 55 வயது.
நடிகை சரண்யா பொன்வண்ணன்:
சினிமாவில் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரம் என்றால் அதற்கு ஏற்ற ஒரு நடிகை தான் சரண்யா. இவர் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் தற்போது நடித்துவரும் நிலையில் இவருக்கு 53 வயது.
நடிகை ராதிகா:
நடிகர் சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பல நடிகர்களுடன் ஹீரோயினியாக நடித்து புகழ்பெற்ற இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 60 வயது.
பூர்ணிமா பாக்யராஜ்:
தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் பூர்ணிமா. இவர் தற்போது திரைப்படங்களில் அம்மாவாக நடித்து வருவது மட்டுமல்லாமல் சீரியலிலும் களமிறங்கியுள்ளார். இவருக்கு வயது 62.
