LATEST NEWS
இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பா இந்த நடிகரா?… அக்கா ஹீரோயினி போல் இருக்காங்களே… வெளியான குடும்ப புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத்.
நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார்.
அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.
அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார்.
அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அனிருத்தின் தந்தையும் நடிகருமான ரவிச்சந்திரன் தனது மகனைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார்.
அதில், அனிருத்துக்கு சிறுவயதில் பாடவே தெரியாது, ஆனால் இன்று பல பாடல்களை மிகச் சிறப்பாக பாடி வருகிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனைப் பார்க்கும்போது ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் ஒரு ரசிகனாகவும் அவரை பார்த்து பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தற்போது இந்தியன் 2, ஜெயிலர், தளபதி 67 மற்றும் ஏகே 62 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் நடிகர் தான்.
இதுவரை அவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இதனிடையே அனிருத்துக்கு வைஷ்ணவி என்ற ஒரு சகோதரி உள்ளார். அவருக்கு சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது.
தற்போது அனிருத் தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சில அன்சீன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதனைப் பார்த்த ரசிகர்கள் அனிருத் அக்கா வைஷ்ணவி ஹீரோயினி போல் இருக்காங்களே எனக் கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.
