மாற்றுத்திறனாளி மாணவருக்கு கீழே இறங்கி சென்று சான்றிதழ் வழங்கிய நடிகர் விஜய்… வெளியான புகைப்படங்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாற்றுத்திறனாளி மாணவருக்கு கீழே இறங்கி சென்று சான்றிதழ் வழங்கிய நடிகர் விஜய்… வெளியான புகைப்படங்கள்

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலமாக பல சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.

Advertisement

அதாவது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல பணிகளை ரசிகர்களை சந்தித்து செய்து வருகிறார்.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் விஜயின் பிறந்தநாள் சமயத்தில் ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்.

Advertisement

இந்நிலையில் கடந்த கல்வியாண்டில் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

Advertisement

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் உதவித்தொகை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் இன்று இந்த விழா நடைபெறுகிறது. எதற்காக சுமார் 1500 மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வருகை தந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய் 10, 12ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

அதில் முதலிடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கினார்.

Advertisement

மேலும் மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். அதேசமயம் +2வில் 600 க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவருக்கு நடிகர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று சான்றிதழ் வழங்கினார்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் விஜயின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in