LATEST NEWS
செம மாஸ்… “விஜய்யின் 49 வது பிறந்தநாள்”… வெறித்தனமாக வெளியான லியோ பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணி மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தற்போது லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதத்துடன் லியோ திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இன்றைய விஜயை 49வது பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இதற்கு முன்னதாக லியோ படத்தின் டைட்டில் வீடியோ வெளியான போது விஜயின் ஹேர் ஸ்டைல் மற்றும் தோற்றம் அதில் வித்தியாசமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரில் வெறித்தனமான லுக்கில் ரத்தம் தெறிக்க கையில் சுத்தியலுடன் தளபதி விஜய் ஹாலிவுட் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக உள்ளார்.
அதேசமயம் லியோ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்தப் பாடல் கிட்டத்தட்ட 20 நிமிடம் விஜய் ரசிகர்களை திக்கு முக்காட செய்யும் என்று லோகேஷ் கனகராஜ் உறுதி அளித்துள்ளார். தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
