LATEST NEWS
உடல் மெலிந்த நிலையில் இருந்த ரோபோ சங்கரா இது?… லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து அசந்து போன நெட்டிசன்கள்..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி அண்மையில் உடல் மெலிந்த நிலையில் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் அவருக்கு பல நோய்கள் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்த போது மஞ்சள் காமாலை நோய் வந்து உடல் எடை குறைந்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ரோபோ சங்கர் பழைய நிலைமைக்கு திரும்பி வரும் நிலையில் தன்னுடைய மகளுக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க உள்ளார். இந்நிலையில் ரோபோ சங்கர் கோட் சூட் போட்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
