தனது தம்பியின் பிறந்தநாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த சிம்பு பட நடிகை… – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது தம்பியின் பிறந்தநாளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த சிம்பு பட நடிகை…

Published

on

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி  இத்னானி. இவர் தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

இவருக்கென தற்பொழுது தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Advertisement

இவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சசியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து நூறுகோடி வானவில் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதுதவிர இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் சித்தி இத்னானி. இப்படத்தில் அவர் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சித்தி இத்னானிக்கு இன்ஸ்டாகிராமிலும் கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

Advertisement

அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சித்தி இத்னானி.  தற்போது இவர் தனது அண்ணனின் பிறந்தநாளை மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

அவர்களை நேரில் சந்தித்து பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in