LATEST NEWS
தோழிகளுடன் அந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அஜித் ரீல் மகள் அனிகா… வெளியான லேட்டஸ்ட் வீடியோ…!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அப்ப படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார்.
தற்போது இவருக்கு ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவருடன் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினியாக நடிகை அனிகா நடித்து வருகிறார்.
சமீபகாலமாகவே படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா தற்போது தனது தோழிகளுடன் கேரளாவில் அனிருத் நடத்திய ஒரு concert இல் கலந்து கொண்டுள்ளார். அதில் செல்பி புள்ள உள்ளிட்ட பல பாடல்களுக்கு அனிகா குத்தாட்டம் போட்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
