LATEST NEWS
புதிதாக கார் வாங்கிய பிக்பாஸ் தனலட்சுமி… அவரே வெளியிட்ட புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. அந்த சீசன் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் தனலட்சுமி. இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் அதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு மேலும் பாப்புலர் ஆனாலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் சரியாக கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தினந்தோறும் புதுவிதமான ரீல்ஸ் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனலட்சுமி புதிதாக கார் வாங்கியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
